
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உயர்ந்த நடன இயக்குனராக திகழ்பவர் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரும் நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கியும் வருகிறார்.
தமிழில் விஜய்யை வைத்து இவர் இயக்கிய போக்கிரி மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா, தமிழில் இவர் நடித்து வெளியான சார்லி சாப்ளின் 2, தேவி 2, பொன் மாணிக்கவேல், தேள், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை என வந்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தன.
இதனைத் தொடர்ந்து தற்போது AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பஹிரா படத்தில் நடித்திருக்கிறார் பிரபுதேவா. வரும் மார்ச் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரில் கெட்ட வார்த்தைகளும், ஆபாசமான காட்சிகளும், ஆபாச படத்தில் நடிக்கும் நடிகரின் வீடியோ என முகத்தை சுழிக்கும் காட்சிகள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன.
குடும்ப ரசிகர்களை எப்போதுமே தன்னகத்தே வைத்திருக்கும் நடிகர் பிரபுதேவாவின் பஹிரா ட்ரெய்லரை பார்த்து பலரும் முகத்தை திருப்பிக் கொள்வதைத் தான் பார்க்க முடிகிறது. விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக இப்படியா இறங்குவது நடனப்புயல் பிரபுதேவா அவர்களே..??? என்று பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.




