Spotlightசினிமா

பெட்ரோல் விலை குறைவதில்லை… விழுந்து விழுந்து சிரித்த எஸ் ஜே சூர்யா!

செல்வராகவனின் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க பல வருடங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

அதில் வரும் டயலாக்குகள் பெரும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஆதித்யா கதிர் தனது ரோஜா பூமாலை என்ற யூடியூப் தளத்தில் பெட்ரோல் விலை குறைவதில்லை என்ற தலைப்பில் ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ஒரு காட்சியை தனது ஸ்டைலில் இயக்கியிருக்கிறார்.

அதில், பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் படும் இன்னல்களை காமெடியாக உருவாக்கியிருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களால் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ் ஜே சூர்யாவும் ’பெட்ரோல் விலை குறைவதில்லை’ பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button