Spotlightசினிமா

U/A தரச் சான்றிதழுடன் வெள்ளியன்று அதீத எதிர்பார்ப்போடு வெளியாகிறது ”கள்ளன்”!

Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிப்பில் இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கள்ளன்” .

இப்படத்தில், கரு பழனியப்பன் ஹீரோவோக நடித்துள்ளார். கிராமங்களின் பின்னணியில் மாறுபட்ட ஒரு கதைகளத்தோடு உருவாகியுள்ளது இப்படம்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் மார்ச்-18 வெள்ளியன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.

படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக வெள்ளியன்று இப்படம் வெளியாக இருப்பது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குனர் சந்திரா தங்கராஜ் மண் மணம் மாறாமல் ஒரு அழகான வாழ்வியலை ட்ரெய்லரில் கொடுத்திருப்பதாக பிரபலங்கள் பலர் கூறி வருகின்றனர்.

இப்படத்திற்கு U/A தரச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

ரன்னிங் டைம் 2 மணி 4 நிமிடங்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button