Spotlightசினிமா

மாஸ் ஹீரோ என் டி ஆர் நடிப்பில் உருவாகும் தேவரா பட கிளிம்ப்ஸ்

மாஸான புதிய அவரதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியாகியுள்ளது. விஷூவல்ஸ், இசை என சர்வதேச தரத்துடன் இந்த பான் இந்தியா கிளிம்ப்ஸ் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கடல், கப்பல் எனத் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸின் காட்சிகள் ரத்தத்தால் நிரம்பியுள்ளது. தேவராவாக வித்தியாசமான அவதாரத்தில் என்டிஆர் இந்த கிளிம்ப்ஸில் மிரட்டியுள்ளார். இந்த கிளிம்ப்ஸில் உள்ள ஒவ்வொரு ஃபிரேமையும் மாஸாக அதே சமயம் கவனத்துடன் கொரட்டாலா சிவா உருவாக்கியுள்ளார்.

இந்த கிளிம்ப்ஸ் ‘தேவரா’வின் பிரம்மாண்டத்தையும் தேவராவின் கதாபாத்திரத்தையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, என்டிஆரின் வசனங்கள், பாப்பவர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் தருவதாக அமைந்துள்ளது. அதிலும், ’டி’ வடிவத்திலான ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றை கடலில் கழுவிக் கொண்டே, ‘இந்தக் கடல் இங்குள்ள மீன்களை விட அதிக ரத்தம் பார்த்துள்ளது. அதனால்தான் இது ‘ரெட் சீ’’ என ஏன் அந்தக் கடல் ‘ரெட் சீ’ எனப்படுகிறது என்பதை பவர்ஃபுல்லான வசனங்களோடு உரத்தக் குரலில் என்டிஆர் பேசுவது பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அனிருத்தின் சர்வதேச இசை இந்த கிளிம்ப்ஸை போலவே படத்தையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இவரது இசை டீசருக்கு மிகப்பெரிய பலம். என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸின் தயாரிப்பு மதிப்புகளும் படத்தின் கதை மற்றும் தரத்திற்கு ஏற்ற வகையில் மிகப்பெரியதாக அமைந்துள்ளது. விஎஃப்எக்ஸ் குழுவின் அட்டகாசமான பணி படம் பார்க்கும்போது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரியும். சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, டாம் ஷைன் சாக்கோ, நரேன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ’தேவாரா’ படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்க, தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாண்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button