Spotlightதமிழ்நாடு

நெருங்குகிறது ஃபனி புயல்.. தயார் நிலையில் பேரிடர் படை!

மிழகத்தை சில நாட்களாக பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது ஃபனி புயல். முதலில் தமிழகத்தை கஜாவை விட பல மடங்கு வேகத்தில் இது தாக்கக்கூடும் என்ற சொல்லிக் கொண்டிருந்த நிலையில், ட்ஃபனியால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.

தற்போது இந்த புயல் சென்னைக்கு 900 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 21 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இன்று அதி தீவிர புயலாக மாறும். புயல் தீவிரம் பெறுவதன் காரணமாக, கேரளாவில் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 2, 3ம் தேதிகளில் ஒடிசாவின் கடலோர பகுதிகளில், நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஃபனி புயல் இன்று தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button