Spotlightசினிமா

நாளை முதல் திரையரங்குகளில் வெளிவருகிறது “விடுதலை – பாகம் 2”

யக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஏராளமானோர் நடிப்பில் வெளிவந்து வெற்றிகண்ட படம் தான் விடுதலை.

இப்படத்தின் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதியான நாளை இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

படத்திற்கு ஏற்கனவே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. ஏற்கனவே பாடல்கள் வெளியாகி இளம் தலைமுறை முதல் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

viduthalai 2, vijay sethupathi, vetrimaran, soori

Facebook Comments

Related Articles

Back to top button