Spotlightதமிழ்நாடு

’முதலிரவு இப்ப ரொம்ப முக்கியமா??’… தந்தையை கொன்ற புதுமாப்பிள்ளை!

ந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்தில் கூட அவ்வப்போது வித்தியாசமான நிகழ்வுகளும் சம்பவங்களும் அரங்கேறுவது வழக்கமான ஒன்றாக மாறிப் போய் விட்டது.

அப்படியாக, திருமண நிகழ்வு முடிந்த வேளையில், மொய் கணக்கை பார்த்துவிட்டு போ, முதலிரவா முக்கியம் என தந்தை கேட்க, பேச்சுவார்த்தை முற்றி தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது ஆதிச்சனூர் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் இளமதி.

இளமதிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண் நிகழ்வுகள் முடிந்ததும், மொய்ப்பண கணக்கு மற்றும் இதர செலவுகள் குறித்த சரியான கணக்குகளை அன்று இரவு மணமகன் இளமதியும், அவரது தந்தை சண்முகமும் பார்த்தபோது வரவு செலவில் முரண்பாடு இருந்துள்ளது.

இந்த நிலையில், மகன் இளமதி, தன் தந்தையிடம் நாளை காலை பேசிக்கொள்ளலாம். என்று கூற, இளமதியின் தந்தையோ, ‘இப்போ முதலிரவுக்குச் செல்வதுதான் முக்கியமா? கணக்கு வழக்கு முக்கியமா.. மரியாதையாக சரியாக கணக்கை சொல்லிட்டு போ’ என்று இளமதியை பிடித்து கேட்டுள்ளதாகவும், அப்போது தந்தையின் கையை இளமதி தட்டிவிட்டு நகர முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில், ஒரு ரீப்பரை எடுத்து மகனைத் தாக்கியிருக்கிறார் தந்தை, பின் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கிய மகன் தந்தையின் தலையில் அடித்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.

அப்போது மயங்கி விழுந்த சண்முகம் எழாததால், அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்யும்போது, சண்முகம் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து புதுமாப்பிள்ளையும், சண்முகத்தின் மகனுமான இளமதி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய நிகழ்ச்சி துக்க வீடாக மாறியது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button