Spotlightசினிமா

திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட “ஒரு விரல் புரட்சி”… ரசிகர்கள் கொண்டாட்டம்!!

இயக்குநர் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஒரு விரல் புரட்சி என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் பாடல் வெளியான சில நிமிடங்களில் திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கின் திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த திரையரங்கில் தற்போது செக்கச் சிவந்த வானம் திரையிடப்பட்டுள்ளது. இடைவேளையின் போது ஒளிபரப்பான ஒருவிரல் புரட்சி பாடலை ரசிகர்கள் பலரும் கண்டுகளித்தனர்.

 

Facebook Comments

Related Articles

Back to top button