
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யாரவி, திருஞானசம்பந்தர், பரத், இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி இருக்கிறது.
இப்படத்தை நந்தகோபால் தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் படத்தின் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சசிகுமார், ‘ நான் ஷூட்டிங்’ல இருக்கும் போது நான் என்ன சொல்றேன்னோ அத மட்டும் நீ பண்ணுன்னு சமுத்திரக்கனி என்னிடம் சொல்லுவார். இப்படத்தை ஒரு படம் என்பதையும் தாண்டி தற்போதைய சமூகத்துக்கு என்ன தேவையோ அதை ஆழமாகவும், அழுத்தமாகவும் கூறியிருக்கிறது.
திருநங்கைகளின் வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் படமாகவும் இது அமையும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக வந்துள்ளது. நாடோடிகள் முதல் பகுதி கொடுத்த வெற்றியை நாடோடிகள் 2’ம் நிச்சயம் பெற்றுத் தரும்.
சமுத்திரக்கனியும் நானும் மீண்டும் மீண்டும் இணைவோம்.’ என்று கூறினார்.





