
அவிநாசி பிரகாஷ் இயக்கத்தில் அப்துல் ரஃபி, மிதுன், ரித்திக் மோகன், நிதின், பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ஜான் எடத்தட்டில், ராக்ஷி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “நாங்கள்”
வேத் சங்கர் சுகவனம் இசையில் அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படத்தினை ஜி. வி. எஸ். ராஜு தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் சென்று விடலாம்..
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து இருக்கிறார் அப்துல் ரஃபி. தனது மூன்று மகன்களை அவரே வளர்த்தும் வருகிறார்.
பள்ளி மாணவர்களான மூவரையும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார் அப்துல். மிக மிக கண்டிப்புடன். பள்ளி முதல்வராக இருக்கும் அப்துல் தொழிலும் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக பொருளாதாரத்தில் பின்வாங்கும் அப்துல், பில் கட்டாத காரணத்தில் வீட்டில் மின்சாரம், தண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டில் அனைத்து வேலைகளையும் மூன்று சிறுவர்களே செய்து வருகின்றனர். ஒருகட்டத்தில், தந்தை அளவுக்கு அதிகமாக கண்டிப்பு காட்டிய காரணத்தால் அம்மாவைத் தேடி செல்கின்றனர் மூவரும். அங்கு, மூன்று சிறுவர்களும் படிப்பிற்கான பொருளாதாரத்தை அம்மாவும் தாத்தாவும் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தால் மீண்டும் அப்பாவைத் தேடியே வந்து விடுகின்றனர் மூவரும்.
வாழ்க்கையை இனி வேறு மாதிரி வாழலாம் என்று கூறி அந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஒரு மாநிலத்திற்குச் செல்ல திட்டமிட்ட அப்துல், தனது மகன்களிடம் கோரிக்கை வைக்க, கோரிக்கையை மகன்கள் ஏற்று அவரோடு சென்றார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
மிகவும் இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கின்றனர் படத்தில் நடித்த அனைவரும்.
அதிலும் அந்த மூன்று சிறுவர்களும் தங்கள் கதாபாத்திரத்தினை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கின்றனர்.
சிறுவர்களின் அப்பாவாக நடித்திருந்தவரும் தனது கேரக்டரை மிகவும் இயல்பாக செய்து முடித்திருக்கிறார்.
கதை மிக மெதுவாக நகர்வதால், நமது பொறுமையை அளவுக்கு அதிகமாகவே சோதித்து பார்த்து விடுகிறது.
நாயின் மீது வைத்திருக்கும் பாசத்தை ஒரு கணவன் மனைவி மீது இல்லாமல் போனதற்கான காரணத்தை சற்று விளக்கியிருந்திருக்கலாம்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் தான்.
கதையோ திரைக்கதையோ அதை அதீத பொறுமையாக கூறினால், படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விடும். அதுவே இப்படமும் செய்துள்ளது.
பொறுமையாக இருந்தால் நல்லதொரு வாழ்வியலை இப்படத்தில் காணலாம்..




