Spotlightசினிமா

ஆனந்த் சங்கரின் ஸ்கிரிப்டைக் கேட்டு வியந்து போன விஷால்..!

 

சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷால். தற்போது கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஷால், அடுத்த படத்திற்காக கதை தேர்விலும் கவனமாக இருக்கிறார்.

ஏ ஆர் முருகதாஸின் உதவியாளரும், அரிமா நம்பி, விக்ரமின் இருமுகன் படத்தின் இயக்குனரான ஆனந்த் ஷங்கரிடம் ஒரு கதையைக் கேட்டுள்ளார் விஷால்.

கதையைக் கேட்டு முடிந்ததும் வியந்து போன விஷால், ஆனந்த் ஷங்கரை கட்டிப் பிடித்து பாராட்டியுள்ளார். ஆக்‌ஷன் படம் முடிந்ததும் உடனே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் எனவும் கூறியுள்ளாராம் விஷால்.

Facebook Comments

Related Articles

Back to top button