Spotlightசினிமா

அன்புமணியின் ’டகால்டி’… தளபதி கிட்ட மட்டும் தான் உங்க வீரமா..???

போன வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘சர்க்கார்’. இப்படத்தின் முதல் பார்வை அதாவது பர்ஸ்ட் லுக் வெளியான போது, அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இருந்தது.

இதனைக் கண்டு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்தார். விஜய்யே இப்படி செய்யலாம் என விஜய்க்கு எதிராக கடும் வார்த்தைகளை கொண்டு வாள் வீசினார்.

இறுதியாக, அந்த போஸ்டர் நீக்கப்பட்டு விட்டது. தற்போது, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இதனைக் கண்டு, எந்த ஒரு இயக்கத்திலிருந்தோ அல்லது அமைப்பிலிருந்தோ எந்தவிதமான எதிர்ப்புகளும் இதுவரை வரவில்லை.

ஏன் இப்படிபட்ட ஓர் அரசியல் உங்களுக்கு என நெட்டிசன்கள் இணையத்தில் அன்புமணியை அவர்களை விளாசி தள்ளி வருகின்றனர்.

ஒருவேளை சந்தானம், அன்புமணியின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ..???

Facebook Comments

Related Articles

Back to top button