
நாயகன் வைபவ் ஒரு எஞ்சினியர். மாலை 6 மணிக்கு மேல் பார்வை தெரியாத வாலிபராக வருகிறார். நாயகியை பார்த்ததும் காதலில் விழுகிறார். தனக்கு 6 மணிக்கு மேல் பார்வை தெரியாது என்பதை மறைத்து காதலித்து வருகிறார்.
இவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா இல்லையா..?? என்பது படத்தின் க்ளைமாக்ஸ்
நாயகன் வைபவ், கதைக்கு ஏற்ற கதாபாத்திரம் தான். ஆங்காங்கே இவரது ரியாக்ஷன் காமெடி எடுபட்டிருக்கிறது. கதை என்ற ஒன்று பெரிதாக இல்லை என்றாலும் 2.15 மணி நேரம் புல் எண்டரெடெயின்மெண்ட் தான்.
நாயகி பல்லக் லல்வானி தமிழ் தெரியாத நாயகிதான் இருந்தாலும், வாய்ஸ் சிங்க் ஆகுதா ஆகலையான்னு கூடவா பார்க்க மாட்டீங்கப்பா..???
சதீஷ், டத்தோ ராதாரவி, ராமர், இளவரசு, என அனைவரும் இருந்தும் ஆங்காங்கே மட்டும் தான் காமெடி எடுபட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம் தான்.
இவர்களோடு வில்லன் என்ற பெயரில் உலா வரும் ஆர் என் ஆர் மனோகரும் இருக்கிறார்.
காமெடி தான் கதை மூல தனம் என்றால், அதில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாமே இயக்குனரே.??
ஜிப்ரானின் இசையில் பின்னனி இசை ஓகே ரகம் தான்.. பாடல்கள் ஒன் டைம் கேட்கலாம்..
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு தான் கலர்புல்லாக இருக்கிறது.
லாஜிக் இல்லாமல் நகரும் கதையில் , ஆங்காங்கே சில காமெடிகளை வைத்திருப்பதால் ஒரு டைம் பார்க்கலாம் என்ற மனதோடு வெளியே வரலாம்…
சிக்ஸர் – சிக்ஸர்லா இல்ல சிங்கிள் தான்…





