Spotlightசினிமா

ஜெயிச்சிட்ட கவின்; “லிப்ட்” படத்திற்கு வாழ்த்திய பிரபலங்கள்!

வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ளது “லிப்ட்”. இப்படம் வரும் 1 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சி இன்று திரையிடப்பட்டது. படத்தினை காண சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் , தீனா, மாஸ்டர் சாண்டி, ரக்‌ஷன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

படத்தினை பார்த்த பிரபலங்கள் கவினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தரமான பேண்டசி, ஹாரர் திரில்லர் படமாக வந்துள்ளதாகவும் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்திற்காக பாஸிடிவான ரிப்போர்ட்ஸை கண்டு படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

பிக் பாஸ் எண்ட்ரிக்குப் பிறகு கவினுக்கான ரசிகர் பட்டாளங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அவரது லிப்ட் படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button