Spotlightசினிமா

மெட்ரோ இயக்குனரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் புதிய படத்தை மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

T . D ராஜா தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு (சசிகுமார் 19 ) பொள்ளாச்சியில் சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் T D ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும்.

ஆன்ட்ரூ லூயிஸின் கொலைகாரன், நவீனின் அக்னி சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனி ஆனந்த கிருஷ்ணனின் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை N .S உதயகுமார் செய்கிறார். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Facebook Comments

Related Articles

Back to top button