
தளபதி 66 படத்தை இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வம்சி இதற்கு முன் கார்த்தியின் தோழா, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் வம்சி பைடிப்பள்ளி.
விஜய்யின் 65வது படமான “பீஸ்ட்” படத்தை நெல்சன் இயக்கி வரும் நிலையில் 66 வது படத்தை வம்சி இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜு மற்றும் சிரிஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
படத்தின் அடுத்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
i
Facebook Comments





