
இயக்குனரும் நடிகருமான தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இயக்கியும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.,
இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவதுபடமான இட்லி கடை வெளியாகும் தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வருடம் அதாவது 2025 ஏப்ரல் மாதம் 10 ம் தேதி இப்படத்தினைத் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.
படத்தினை டாவ்ன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வெண்டர்பார் நிறுவனம் இரு நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிற்து.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தினை ரிலீஸ் செய்யவிருக்கிறது.
படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Facebook Comments





