Spotlightசினிமா

கொஞ்சம் இருங்க பாஸ்…. எங்க டீசர் வரட்டும்; ராம் கோபால் வர்மாவை வம்புக்கிழுக்கும் பப்ஜி இயக்குனர்!

தாதா 87 படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி. இவர் தனது அடுத்த படைப்பாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

புதுமுகம் அர்ஜுமன் கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனித்ரா, ரித்திகா சரண், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், கதிர், KPY யோகி என பலர் நடித்து வருகின்றனர்.

படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு சவால் விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் வெளியான ராம்கோபால் வர்மாவின் NAKED TRAILER மிகப்பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://www.youtube.com/watch?v=lWwsFh4vttE

இந்நிலையில் விஜய்ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் உங்கள் படங்களை பார்த்திருக்கிறோம். நீங்கள் தைரியமான நபர். எங்க ‘PUBG’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்) டீசருக்கு காத்திருங்கள்.. நீங்களே பாராட்டுவீர்கள்.’ என்று கூறியுள்ளார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button