Spotlightசினிமா

காமெடிக்கு பஞ்சமில்லா ‘Mr.லோக்கல்’!

சிவகார்த்திகேயன் நடிக்க எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘Mr.லோக்கல்’. வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால், இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாயகியாக நயன்தாரா நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க சக்திவேல் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேல் இப்படத்தை வெளியிடுகிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button