Spotlightசினிமா

ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பு… முதல் படமாக வெளிவருகிறது ‘மெர்குரி’!

சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு எட்டப்பட்டு நாளை (ஏப்ரல் 20) முதல் படப்பிடிப்பு துவங்கும் எனவும் முதல் படமாக ‘மெர்குரி’ வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது,

’இனிமேல் சினிமா தியேட்டர்களில் கட்டணம் 150 ரூபாய்க்கு மேல் இருக்காது.

தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்படும்.

டிக்கெட் விற்பனை இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும்.

தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். .

அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்க கூடாது.

அது கண்காணிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்

தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதிவரையிலான வெளியீட்டு படங்களை இப்போதே பட்டியலிட இருக்கிறோம்.

இனி வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்படும். இதைக் கண்காணிக்கவும் ஒரு புது குழு அமைக்கப்படும்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகும். முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியாகும்.

கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகளும் வரும் ஏப்ரல் 20, வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.

ஆனால், படப்பிடிப்பை துவக்க புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்.

ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அந்த படக் குழு தயாரிப்பாளர் சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்.

அதற்கு அந்த படக் குழுவினர் முழு கதையையும் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும்,

எந்தெந்த நாட்களில், எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்கிற விவரத்தை கொடுக்க வேண்டும்.

படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில் நுட்ப கலைஞர்களின் ஒப்பந்த பட்டியலை கொடுக்க வேண்டும்.

இந்த விபரங்களையெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கடிதம் கொடுக்கும்.

அந்த அனுமதி கடிதத்தை பெப்சி அமைப்பில் படக் குழுவினர் கொடுத்தால் மட்டுமே, பெப்சி தொழிலாளர்கள் அந்த படத்தில் பணியாற்றுவார்கள்.

இந்த புதிய விதியின்படியே வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும்.

சம்பளப் பிரச்சினை தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் முடிவெடுக்கப்படும்.

‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது ‘காலா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது. இதற்கு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி.’ என்றார் விஷால்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close