
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர் சி, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்தள்ள திரைப்படம் “அரண்மனை 3”.. ஏற்கனவே இரண்டு பாகங்களை இயக்கி தற்போது மூன்றாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்…
கதைப்படி,
இரண்டு பாகத்திலும் வந்த கதை தான்…. ஒரு அரண்மனை, அந்த அரண்மனைக்குள்ள பேய்,
சுந்தர் சி வராரு, அந்த பேய் யாருன்னு கண்டுபிடிக்கிறாரு, அந்த பேய்க்கு ஒரு ப்ளாஷ்பேக், அது முடிஞ்சதும் இறுதியா பேயை அழித்தார்களா இல்லையா என்பதே கதை….
படத்தின் நாயகனாக ஆர்யா. 2 பாட்டு, 2 பைட்டு இது தான் ஆர்யாவுக்கு கொடுக்கப்பட்ட வேலை… படத்தில் அரை மணி நேரம் கூட ஆர்யாவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதே நிலைமை தான் ராஷி கண்ணாவிற்கும். இவங்களுக்கு 2 பாட்டு, அப்புறம் அங்க அங்க வந்து போற காட்சிகள் தான்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வரும் கதாபாத்திரம் யார் என்றால் அது வில்லனாக வந்த சம்பத் ராஜ் தான்.
பேயை கண்டுபிடிப்பதும், அதை அழிக்க பாடுபடுவதுமென போன பாகத்தில் சுந்தர் சி என்ன செய்தாரோ அதையே தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார்.
ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து மிரட்டியிருக்கிறார். மற்றபடி, விவேக் , யோகிபாபு, நந்தினி, மனோபாலா காம்பினேஷனில் காமெடி ஆங்காங்கே எட்டிப் பார்த்து செல்கிறது.
சத்யாவின் இசையில் இரண்டு பாடல்கள் ரகம், பின்னனி இசை ஓகே.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனையின் பிரம்மாண்டத்தை இன்னும் சற்று மிரட்டலாகவே கொடுத்திருக்கலாம்…
சுந்தர் சி’க்கு ஒரு மடல்,
அன்பே சிவம், அருணாச்சலம், வின்னர் என பல ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ஒரு மிகப்பெரும் இயக்குனருக்கு கதைக்கு பஞ்சமா?? அரைத்த மாவையே திரும்ப திரும்ப எத்தனை முறை அரைப்பீர்கள் சுந்தர் சி சார் அவர்களே.. போதும் எங்களால் தாங்க முடியவில்லை…
அரண்மனை 3 – முதல் இரண்டு பாகத்தில் வந்த கதை என்று கூறி, “ஆண்ட்ரியாவின்” ப்ளாஷ்பேக் காட்சிகள் மட்டும் காட்டியிருந்தால் உங்களுக்கும் நேரம், செலவு மிச்சம், எங்களுக்கும் நேரம் மிச்சம்…





