
தயாரிப்பாளர்கள்: சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா
இயக்கம்: சித்தின்
கிரியேடிவ் ப்ரொடியூசர் :; சிவ்ராஜ்
நடிகர்கள்: சித்தார்த் ராஜ்சேகர், சுரேந்திரன், ப்ளேர் சிங்கர்
இசை: சிராஜ் சாஜி
ஒளிப்பதிவு: ஆகாஷ் சேதி
Internet Lifestyle Hub எனும் நிறுவனத்தை நடத்தி வரும் சித்தார்த் ராஜசேகர், தனது வாழ்க்கையை 2018 ல் துவங்கி எப்படி தனது பயணத்தை தொடர்ந்தது குறித்து விளக்கியுள்ளார்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படியாக ஓட வேண்டும், எப்படியாக மாற வேண்டும் என்று ஒரு மோடிவேஷ்னல் கற்றலை கற்றும் கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து பல இளைஞர்களின் வாழ்க்கையில் அவர் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார். பல இளைஞர்களின் வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த இவரின் பேச்சு ஒரு உந்துதலாக இருந்து வருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தனது வாழ்க்கையின் பயணத்தை எப்படி ஜீரோவில் இருந்து துவங்கினேன், இப்போது எந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்பதை காணொளியாக சித்தார்த் ராஜசேகர் விவரித்திருக்கும் படம் தான் இந்த கேம் ஆஃப் சேஞ்ச்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இம்மாதிரியான டாக்குமெண்ட்ரி படங்கள் உழைப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். அப்படியாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சித்தின்.
ஒளிப்பதிவு மற்றும் இசை பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது.
பாலைவனம், கடவுள், பரதநாட்டியம் என வாழ்க்கையின் பயணங்களை குறிக்கும் வண்ணம் பல குறியீடுகளை உள்ளடக்கிய ஒரு காவியமாக வந்திருக்கும் இந்த “கேம் ஆஃப் சேஞ்ச்” படத்தினை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்..





