
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த பட டைட்டில் போஸ்டர் டீசர் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியுட்டுள்ளார்.
இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.
களவு (வெப் சிரியஸ்) படத்தினை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கவிருக்கிறார்.
விஷ்ணு விஷால் சுத்தியலை கொண்டு யாரையோ கொலை செய்வது போன்று வரும் இந்த டீசர் முடிவில் படத்தின் டைட்டில் அறிவிப்பு வருகிறது.
படத்திற்கு ‘மோகன் தாஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். விஷ்ணு விஷால் தனது 6 பேக் உடற்கட்டோடு தோன்றி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
விரைவில் அடுத்தடுத்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments





