Spotlightசினிமா

ரஜினிக்கு அழைப்பு விடுத்த இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி!

 விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ‘தாதா 87’. ஒரு திருநங்கை காதலின் வலியை மிகவும் மென்மையாக இயக்குனர் கூறியிருந்தார். இப்படத்தில் நாயகி ஒரு திருநங்கையாக நடித்திருந்தார்.

பத்திரிக்கையாளர்களாலும் பொதுமக்களாலும் இப்படம் பெரிதாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்று மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனக்கு திருநங்கையாக நடிக்க நீண்ட நாள் ஆசை என பேசினார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் தெரிவித்துள்ளார்.

அதில், ‘தர்பார் பட புரோமோஷன் அடுத்த பட வேலைகளுக்கு நடுவில் காலம் நேரம் ஒத்துழைத்தால் தாதா87 படத்தை காண்பிக்க தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதம் இதோ…

Facebook Comments

Related Articles

Back to top button