Spotlightசினிமாதமிழ்நாடு

ஆறு மணி முதல் 9 மணி வரை முழு ஊரடங்கு; அதிரடி உத்தரவை பிறப்பித்த முதல்வர்!

கொரோனாவின் பாதிப்பால், சுமார் ஒரு மாத காலமாக முழு ஊரடங்கில் இருந்து வரும் இந்தியா, இந்த நிலை இன்னும் எதுவரை தொடரும் என்ற கேள்விக்குறி எழுந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் அத்திவாசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் ஆணை வெளியிட்டிருக்கிறார்.

அதில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை சுமார் 4 நாட்கள் இந்த மூன்று மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

3 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் இரு தினங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும்;

ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button