Spotlightசினிமா

ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ’கோமாளி’; மகிழ்ச்சியில் படக்குழு!

றிமுக இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான படம் தான் ‘கோமாளி’.

இப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருந்தார். சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேல் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.

நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால், குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து படத்தினை பார்த்துச் செல்கின்றனர்.

படத்தில் கூறப்பட்ட கருத்து தற்போதைய சூழலுக்கு தேவையான ஒன்று என்பதால், அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குழந்தைகள் கொண்டாடும் விதமாக யோகிபாபுவின் காமெடி சரவெடியாய் தெறிக்க, திரையரங்குகளில் சிரிப்பலைகள் விண்ணை முட்டுகிறது.

சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button