
2019 ஐபிஎல் போட்டியின் அரைஇறுதி சுற்று போட்டி நேற்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டெல்லி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிக் கொண்டன.
இதில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் நடந்த ஒரு இனிப்பான சம்பவத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி அணியின் வீரர் பண்ட் பேட்டிங் செய்யும் போது, அவரது ஷு லேஸ் கழண்டு விட, அதை சற்றும் தாமதிக்காமல் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா ஓடி வந்து அந்த ஷு லேஸை கட்டி விட்டுச் சென்றார்.
இந்த செயல், ரசிகர்களை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த மன நெகிழ்வு வீடியோவை நெட்டிசன்கள் அனைவரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ,
Facebook Comments





