
வேலூர் மாவட்டம் வாலஜாபாத்தை சேர்ந்தவர் காவ்யா… இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் காவ்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது… இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளனர்.
இதற்கு தடையாக இருப்பது அந்த சிறுவன் தான் என எண்ணி, அந்த 4 வயது சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று பின் சாக்குப்பையில் கட்டிக் கொண்டு, அருகேயுள்ள பாலத்தின் அடியில் புதைத்துள்ளனர் இருவரும்…
பின் காவ்யாவின் தாயார் வீட்டிற்கு வந்து பேரன் எங்கே எனக் கேட்டதும், மாட்டிக் கொண்ட காவ்யா, அருகில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியிடம் நடந்ததை கூறி சரணடைந்தார்.
பின், காவல்துறைக்கு தகவல்.தெரிவிக்கப்பட்டு காவ்யா கைது செய்யப்பட்டார். தலைமறைவான தியாகராஜனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



