Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனாவுக்கு மருந்து தயார்…. அதிரடி அறிவிப்பு!

லகம் முழுவதும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தினை தயாரிக்கும் வேலைகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறது.

இதுவரை சுமார் 4.22 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா 4 இடத்தை பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷியா அறிவித்துள்ளது. அவிஃபாவிர் (Avifavir)என்ற இந்த மருந்து நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரார் (ChemRar) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்கிறது.

ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் கெம்ரார் குழுமம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தொகுதி அவிஃபாவிர் மருந்தை ரஷ்ய மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 60000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button