Spotlightசினிமா

‘மூடர் கூடம்’ நவீனோடு கைகோர்க்கும் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு இவர் நடிக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் மூடர் கூடம் இயக்குனர் நவீன்.

பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

இது அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது என்பதையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

‘அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவுடன் விஜய் ஆண்டனி முதன் முதலாக கை கோர்த்துள்ள இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button