Spotlightவிமர்சனங்கள்

Friday – Review 3/5

நடிகர்கள் : மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் (Driver Jamuna), சித்ராசேனன் (Manjumal Boys), சித்து குமரேசன் (Thangalaan, Yaathisai)

தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி

கதை & இயக்கம் – ஹரிவெங்கடேஷ்

ஒளிப்பதிவு – ஜானி நாஷ்

இசை – டுமே

படத்தொகுப்பு – பிரவீன் M

கலை – கார்த்தி லோகா

சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி

ஒலி கலவை – பிஜூ ஆண்டனி

வண்ணமயமாக்கல் – பிரேம் குமார் G

ஒப்பனை – நீலா ஜீவன்

விளம்பர வடிவமைப்பு – அப்யஜித் வீரா

மக்கள் தொடர்பு – திரு

தயாரிப்பு நிறுவனம் – Dakdam Motion Pictures

விநியோகம் – ஷிவானி ஸ்டூடியோஸ் , செந்தில்.

கதைப்படி,

படத்தின் ஆரம்பத்திலேயே ரெளடி கும்பல் ஒன்றை கொலை செய்வதற்காக களம் இறங்குகின்றனர் படத்தின் கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி, KPY தீனா மற்றும் கலையரசன். நூலிழையில் அவன் தப்பிக்க, அவர்களிடம் இருந்து இந்த மூவரும் தப்பித்து ஓடுகிறார்கள்.

இதில் தீனா கத்தியால் குத்தப்படுகிறார். தொடர்ந்து, ஒரு பாதுகாப்பான இடத்தை வந்தடைகின்றனர் மூவரும். இதில், தீனாவிற்கு முதலுதவி செய்து அவர் காப்பாற்றப்படுகிறார்.

அதே சமயத்தில் அனிஷ் வெளியே சென்று வரும் தருணத்தில், தனது போனில் அனிஷ் இங்கு தான் இருப்பதாகவும் சீக்கிரம் வந்தால் அவரை கொலை செய்துவிடலாம் என்றும் யாரோ ஒருவருக்கு தகவல் கொடுக்கிறார்.

தொடர்ந்து அனிஷிடம் பேசிக் கொண்டிருக்கும் தீனா, தனது வாழ்க்கையில் என்ன நடந்தது தான் ஏன் கத்தியை எடுத்ததற்காக காரணத்தை விளக்குகிறார். கதை ப்ளாஷ் பேக் செல்ல, மிகப்பெரும் ரெளடியும் அரசியல்வாதியுமான மைம் கோபியின் வலது கையாக இருக்கிறார் அனிஷ்.

அவர் சொல்லும் ஆட்களை கொலை செய்வது தான் அனிஷின் வேலை. இவரின் தம்பியும் இந்த தொழிலுக்குள் எட்டிப் பார்க்கிறார். ஆனால், அனிஷுக்கோ தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்ப எண்ணம்.

இதனால், தானும் அந்த தொழிலிருந்து வெளியே வர எண்ணுகிறார் அனிஷ்.

இறுதியில், அனிஷ் என்ன செய்தார்.? பழைய பகை இவரை என்ன செய்தது.?? தீனா யார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக அனிஷ் மாசிலாமணி, மிகவும் யதார்த்தமான நடிப்பை வழங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். வெயிட்டான தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் அனிஷ் மாசிலாமணி.

சில படங்களில் நடித்த அனுபவத்தை மிகக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார் தீனா. சிறியதான கதாபாத்திரம் என்றாலும், அதை தனது பாணியில் கொடுத்து அசரடித்திருக்கிறார்.

தனது அனுபவ நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார் மைம் கோபி. இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிகக் கச்சிதமாக பொருந்தியிருந்தார் மைம் கோபி. ராமச்சந்திர துரைராஜின் நடிப்பும் மிரட்டல் தான். ஒரு கொலை செய்வதற்கு ஸ்கெட்ச் போட வேண்டும் என்ற கதாபாத்திரத்திற்கு தமிழ் சினிமாவிலேயே இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு, இப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தை மாஸாக கொடுத்துவிட்டார். காரிலிருந்து இறங்கி வரும் சமயத்தில் மாஸ் காட்சி தான்.

மற்றபடி, மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரிடமும் இயக்குனர் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார். குறிப்பாக கலையரசன் நடிப்பையும் நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதையை நச் சென நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்துக் கொண்டே சென்றிருந்தார் இயக்குனர்.

க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். இந்த வாரம் திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு ஒரு தரமான படம் என்றால் அது இந்த “ப்ரைடே” தான் என்று அடித்துக் கூறலாம்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு இரண்டு பில்லராக வந்து தாங்கி நிற்கிறது.

ஃப்ரைடே – பரபரப்பு..

Facebook Comments

Related Articles

Back to top button