Spotlightசினிமா

அதிரடி ஆக்‌ஷனுக்கு இணையும் ஹரி – அருண் விஜய்!

யக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.

‘ த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘என் ஆளோட செருப்பக்காணோம்’, ‘இமைக்காநொடிகள் ‘, ‘இஃக்லூ’ படங்களைத் தொடர்ந்து – டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இப்போது இயக்குநர் ஹரி அருண்விஜய் கூட்டணியில் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

அதிரடி ஆக்ஷன் , குடும்பக் கதையுடன் தென் தமிழ்நாட்டுப் பின்புலம் என்கிற கலவையில் ஹரி இயக்கியுள்ள அனைத்துப் படங்களும் பெரிய வெற்றி பெற்றவை.

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இப்புதிய படம் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திள்ளது.

இதன் படப்பிடிப்பு 2021 பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் நடைபெறும் என்றும் மற்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு : வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் .

Facebook Comments

Related Articles

Back to top button