Spotlightசினிமாதமிழ்நாடு

சென்னை மக்களே உஷார்…. கொஞ்சம் கடுமையான ஊரடங்கு தான்!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழு லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

இதற்கு கீழ்க்கண்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்கும்.

அவசரத் தேவைகள் தவிர்த்து வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

மாநில அரசு துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவிதித பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரவேடிய அவசியம் இல்லை.

வங்கிகள் 33 சதவிகித பணியாளர்களோடு 29, 30 ஆகிய நாள்களில் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அது தொடர்பான வங்கிப்பணி, மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது.

காய்கறி கடைகள், மளிகை கடைகள், மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் செயல்பட வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் வாங்கும் மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கி.மீ தொலைவுக்குள் சென்று பொருள்கள் வாங்கி வர வேண்டும்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மனி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

அம்மா உணவங்கள் மற்றும் ஆதரவற்றோருக்குக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும்.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதி பெற்று இயங்கலாம்.

சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை.

சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல உரிய ஆவணங்களைக் காட்டியபிறகே இ-பாஸ் வழங்கப்படு.

வெளிமாநில மற்றும் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் முறையே தொடரும்.

21-06-2020 மற்றும் 28-06-2020 ஆகிய இரு ஞாயிற்றுகிழமைகளில் மேற்கண்ட எந்த தளர்வுகளும் இன்றி முமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது

Facebook Comments

Related Articles

Back to top button