Spotlightசினிமா

ஏலகிரி மக்களின் உரிமைக் குரலாக உருவாகும் புதிய திரைப்படம் – Tam’s Consultancy தயாரிப்பில் சமூகப் படைப்பு!

Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தமிழ்வாணன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள ‘Production No: 2’ திரைப்படத்தை, போங்கு திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தாஜ் இயக்கியுள்ளார்.

ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, போராட்டங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சமூக அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் வலிமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம், மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக-அரசியல் சவால்கள், மற்றும் அவர்களின் குரலாக ஒலிக்கும் உணர்வுகளை ஆழமாக பதிவு செய்கிறது.

கதை 2010-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதும் இன்று வரை கல்வி, விளையாட்டு மற்றும் இடஒதுக்கீட்டு அரசியலில் பின்தங்கிய சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் சூழலுடனும் இந்தக் கதைக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

இயற்கை திறமைகள் இருந்தும், அதிகார அமைப்புகளின் காரணமாக கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் அங்கீகாரம் பெற முடியாமல் தவிக்கும் மலைவாழ் மக்களின் போராட்டத்தை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. சாதனைகள் படைத்த பின்னரும், அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்பும் சமூகப் பொறுப்புமிக்க திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

“வேற்றுமையில் ஒற்றுமை” என்று பெருமை பேசும் நாட்டில், இன்னும் பல வடிவங்களில் மறைந்து கிடக்கும் ஒடுக்குமுறைகளை எந்தவித மறைப்புமின்றி திரையில் பதிவு செய்வதே இந்தப் படைப்பின் முக்கிய நோக்கமாகும்.

நடிகர்கள்

  • தமிழ்வாணன்
  • அபிராமி
  • CSK சரவணன்
  • Bigg Boss பிரவீன்
  • ஜெய் பீம் மொசக்குட்டி
  • அகத்தியன்
  • விஜயலட்சுமி
  • அருணாச்சலம்
  • லயன் சுரேஷ்
  • மைக்கேல்
  • ஸ்ரீராம்
  • கௌசல்யா
  • மேலும், உண்மையான ஏலகிரி மலைவாழ் கிரிக்கெட் வீரர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு

  • தயாரிப்பு: Tam’s Consultancy
  • தயாரிப்பாளர் / கதாநாயகன்: தமிழ்வாணன்
  • இயக்கம்: தாஜ்
  • ஒளிப்பதிவு: தேவசூர்யா (Red Flower புகழ்)
  • இசை: ஜோன்ஸ் ரூபெட்
  • பாடல்கள்: பெருமாள், நவீன்
  • வசனம்: பெருமாள்
  • கலை இயக்கம்: சத்ய நாராயணன்
  • நடன இயக்கம்: விஜய், ஆனந்த் குமார்
  • உடை வடிவமைப்பு: பிரியா
  • சண்டைப் பயிற்சி: லோகு
  • மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

சமூக நீதி, கல்வி, விளையாட்டு, இடஒதுக்கீடு மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான சமூகக் கருத்தை பேசும் முக்கியமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button