
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 23 வயதான தனியார் பள்ளி ஆசிரியர் பள்ளி வளாகத்திலே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்யா. சம்பவத்தின் போது ரம்யா வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரம்யாவுக்கு பள்ளி அருகிலே வீடு இருப்பதால், தினமும் சிக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். அப்படி இருக்கும்போது, சம்பவத்தின் அன்று ராஜசேகர் என்பவருக்கும் ரம்யாவுக்கும் பெரும் வாதம் நடந்துள்ளது. அதன் பின்னரே ரம்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜசேகரை ரம்யா திருமணம் செய்ய மாறுத்ததாலே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
கல்லூரி நாட்கள் முதலே ராஜசேகருக்கும் ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 6 மாதத்திற்கு முன்பு ரம்யாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி அவரது பெற்றோரிடம் ராஜசேகர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ரம்யாவின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தான் ரம்யாவின் கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரியர் ரம்யாவின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.