Spotlightசினிமாவிமர்சனங்கள்

தண்டட்டி – விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “தண்டட்டி”. பாட்டிகள் தங்களது காதுகளில் அணியும் ஒரு வகையான அணிகலன் தான் இந்த தண்டட்டி… இந்த தண்டட்டி என்ன சொல்ல வருகிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

தொலைந்து போன தனது 57 வயதான அப்பத்தாவை (ரோகிணி) கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையம் வருகிறான் முகேஷ். அப்போது, காவல்நிலையத்தில் போலீஸாக பணிபுரியும் பசுபதி தான் கண்டுபிடித்து தருவதாக கூறி, முகேஷோடு செல்கிறார்.

பல இடங்களில் தேடி அலைந்து ரோகிணியை கண்டுபிடித்து விடுகிறார் பசுபதி. ஆனால், சில மணித்துளிகளிலே இறந்து விடுகிறார் ரோகிணி.

இறந்து போன ரோகிணிக்கு 4 மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள். இதில், ஒரு மகன் இறந்துவிடுகிறார்.

இந்நிலையில், இறந்து போன ரோகிணியின் காதில் இருக்கும் தண்டட்டியை ஆட்டையை போடுவதற்கு 4 மகள்களும் திட்டம் போடுகிறார்கள். ஆனால், இரவோடு இரவாக தண்டட்டியை யாரோ களவாடி விடுகிறார்கள்.

திருடு போன தண்டட்டியை பசுபதி தேடிக் கண்டுபிடித்தாரா.?? அவ்வளவு இறுக்கமான சூழலிலும் பசுபதி ஏன் அங்கு இருக்கிறார்.?? அப்பத்தா ரோகிணியின் இறுதி சடங்கு நல்லபடியாக நடந்ததா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருந்தார் பசுபதி. மொத்த படத்தையும் தனி ஒருவனாக தாங்கி பிடித்திருக்கிறார். அப்பத்தாவாக ரோகிணியின் தண்டட்டியில் இருக்கும் காதல் மனதை வருடியது.

ஒரு அழகான ஆழமான காதலையும் தண்டட்டியின் மேல் வைத்திருந்தது, இயக்குனரின் பலமாக பார்க்க முடிந்தது.

ஒரு கிராமத்தில் அப்பத்தா எப்படி இருப்பாரோ, அதே மாதிரியான தோற்றத்தில் நடையில் என ஒரு கிராமத்து அப்பத்தா போலவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ரோகிணி.

அதிலும், இறந்து போன பிறகான காட்சியில் நடிப்பில் அனைவரையும் அசர வைத்திருக்கிறார்..

படத்தின் மற்றொரு பலமாக காட்சிகளை வலுப்படுத்தியது தீபா. கிராம உச்சரிப்பு, தண்டட்டி தனக்கு கிடைக்கவில்லையே என்ற எமோஷனில் தீப்பொறியாய் தீபா பேசும் பேச்சு கண் இமைக்காமல் ரசிக்க வைத்தது.

பாட்டிகளின் யதார்த்த நடிப்பும் நம்மளை ரசிக்க வைத்தது படத்திற்கான ஓட்டத்திற்கு கைகொடுத்தது. அடுத்து என்ன பிரச்சனை வரப்போகுதோ என காட்சிகளுக்கு காட்சி ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது அப்ளாஷ்.

குடிகாரன் போல வந்த விவேக் பிரசன்னாவின் நடிப்பு கோட்டை விட்டு தாண்டிச் சென்றது போன்ற நடிப்பைக் கொடுத்துவிட்டார். சற்று மீட்டர் குறைத்தே நடித்திருந்திருக்கலாம்.

க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட் காட்சிகள் ஓகே என்றாலும், பல லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்க்க வைத்தது படத்திற்கான சற்று சறுக்கல் தான்.

ப்ளாஷ்பேக் காட்சியில் இரவில் கல்லைக் கட்டி கிணற்றில் போடப்பட்டவர் எப்படி உயிர் பிழைத்தார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.

கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை மனதை நெருட வைத்தது. பாடல்களும் கேட்கும் ரகம் தான்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

ஒரு வீட்டிற்குள் அவ்வளவு காட்சிகளை அசராமல் ஒளிப்பதிவு செய்து கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

தனித்துவமான கதையை எடுத்து, அதில் பெரிதாகவே ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா.

இரண்டாம் பாதியில் இருந்த ஒரு வேகம், முதல் பாகத்திலும் சற்று கொடுத்திருந்திருக்கலாம்.

மொத்தத்தில் குடும்பத்தோடு கண்டுகளிக்க சிறந்த படைப்பு…

தண்டட்டி – தங்கமாக ஜொலித்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button