
இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “தண்டட்டி”.
உலகம் முழுவதும் நாளை (23/06/2023) இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தென் மாவட்ட கிராமத்து மக்களின் வாழ்வியலை, காதல், காமெடி, பாசம், வெகுளித்தனம் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக வந்திருப்பதாக ஏற்கனவே விமர்சகர்கள் பலர் கூறியிருந்த நிலையில் இப்படத்தின் மீதான ஆர்வம் சினிமா ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுள்ளது..
அதுமட்டுமல்லாமல், குடும்பத்தோடு சென்று பார்க்கும்படியான படைப்பாகவும் இருப்பதால் இந்த வாரம் வெளியாகும் படங்களின் வரிசையில் டாப் 1ல் தண்டட்டி இருந்து வருகிறது.
நாளை மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கும் ”தண்டட்டி” படம் மாபெரும் வெற்றியடைய தமிழ்வீதி குழுவினர் சார்பாக படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.