
இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் மிகப்பெரும் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”.
கடந்த வியாழக்கிழமை வெளியான இப்படம், பெரும் தோல்வியை சந்தித்தது. பலவீனமாக கதை, திரைக்கதை, நாயகன் சரவணின் நடிப்பு என அனைத்தும் படத்தை பின்னுக்குத் தள்ளியது. இது விமர்சனங்களிலும் எதிரொலித்தது.
இதனால், படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தது.
முதல் நாளான வியாழக்கிழமை, தமிழகத்தில் மொத்தமாக ஒரு கோடி மட்டுமே வசூலை ஈட்டிக் கொடுத்தது. இதில் தயாரிப்பாளரின் ஷேர் என்று பார்த்தால் 40 லட்சம் ரூபாயை கூட தொடாது என்கிறார்கள்.
அடுத்தடுத்த நாட்கள் திரையரங்கில் கூட்டம் குறையத் துவங்கியதால், வசூலும் லட்சத்தில் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படியாக சென்றால் தமிழகத்தில், மொத்தமாக தயாரிப்பாளரின் ஷேர் என்று பார்த்தால் 3 முதல் 4 கோடி வரை தான் கையில் கிடைக்கும் என்கிறார்கள்.
இதனால், லெஜண்ட் சரவணன் பெரும் சோகத்தில் இருக்கிறாராம்.