சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டில் சிறுமி மற்றும் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது நாட்டிற்கே அவமானமானமாகும். நாம் எந்த மாதிரியான சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
இனி சிறுமிக்கோ அல்லது பெண்ணிற்கோ இது போன்று சம்பவம் ஏற்படாமல் உறுதி செய்வது நமது பொறுப்பாகும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
காஷ்மீரின் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். மேலும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற மேரி கோம், மனிகா பத்ரா, மிராபாய் சானு, சங்கீதா சானு, மனு பகிர், வினேஷ் போகத், சாய்னா நெய்வால், ஹீனா ஆகியோர் நமக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
Facebook Comments