வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா நடிப்பில் உருவாகியுள்ளது ‘சுய் தாகா’. அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இந்த ஆண்டு இப்படம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேசிய விருது பெற்ற இவர்களுடன் வெற்றி இயக்குனரான சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளது இப்படத்திற்கு மேலும் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.
வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடுத்துள்ளார்.சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம் .வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா .
“மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான் .எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான் .கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம் .சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது.படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் ,தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்” என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.
‘வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும்.வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது.இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது “என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.