தமிழ்நாடு

சென்னையிலிருந்து தூத்துக்குடியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்.. வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர். பல இடங்களில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து பல இளைஞர்கள் அமைப்புகள் தூத்துக்குடிக்கு நேராக சென்று தங்களது ஆதரவை அப்பகுதி மக்களுக்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டங்களும் நடத்தினர்.

அப்போராட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புகள்:

1. இளந்தமிழர் முன்னணி கழகம்
2. தமிழக மக்கள் கழகம்
3. இளைய தலைமுறை அமைப்பு
4. இளந்தமிழகம் இயக்கம்
5. மக்கள் பாதை
6. தமிழக பண்பாடு மற்றும் கலாச்சார பாதுகாப்பு இயக்கம்

இவர்களோடு தமிழர் தேசிய முன்னணி துணைத்தலைவரும், ஊடகவியலாளர் ஐயா அய்யநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். வந்த அனைவரும் ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்து ஆய்வறிந்தனர்.

– தனிஷ்பிரபு வே

 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close