Spotlightசினிமா

₹50 கோடி வசூலை கடந்த ‘கட்டா குஸ்தி 2’.. ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்!

செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கருணாஸ், முனீஸ்காந்த், பேபி சாரா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியான சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற இப்படம், பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. தற்போது வரை உலகளவில் சுமார் ₹55 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், தனது சமூக வலைதளப் பதிவில்,

“My first ₹50 crore grosser… and a moment I’ll never forget. To everyone who bought a ticket, laughed, cheered, and celebrated Gatta Kusthi 2 – thank you from the bottom of my heart. உங்கள் அன்பே எனது மிகப்பெரிய பலம். இனியும் சிறந்த கதைகளுடன் உங்களை மகிழ்விக்க தொடர்ந்து உழைப்பேன்.”

என நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் இந்த வசூல் சாதனை, விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button