
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டத் துவங்கியுள்ளனர்.
வேட்பாளர்களின் தேர்வுகள் அதீத வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் விஜய் மக்கள் இயக்கமும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு அநேக மக்கள் தந்த ஆதரவினால், பல இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கவிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் புஸ்ஸி ஆனந்த். அதற்காக நிர்வாகிகள் பனையூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.





