Spotlightதமிழ்நாடு

கோவையில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட இரண்டு பெண்கள் பலி..!

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ளது நாடார் காலணி. இக்காலணியில் ஸ்ரீ செல்வவிநாயகர் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனிடையே, அந்தப் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 31 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உரிய சிகிச்சைக்குப் பின்னர், 12 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றனர் .

2 குழந்தைகள் உள்பட 19 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்ட 11 பேருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 42 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரசாதத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த, லோகநாயகி (62), சாவித்திரி(60) ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் .இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பக்தர்கள் தீபம் ஏற்றிச் சென்ற நெய்யில் தான் அந்த பிரசாதத்தை தயார் செய்துள்ளனர். இதன் காரணமாக இச்சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button