சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த எம் கே சூரப்பா. இவருக்கு நியமண சான்றிதழை நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் வழங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமணம் செய்ததற்கு பல அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிசு செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை “காவி” மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.