தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் மகளிர் திட்டத்தின் மூலம் வெள்ளிக்கிழமை (29/11/2024) நடத்தப்பட்டது.
இப்பயிற்சியானது உயர்திரு கிருஷ்ணகுமார் உதவி திட்ட அலுவலர் (LH) தலைமையில் நடைப்பெற்றது. மேலும், மாவட்ட சமுதாய வள பயிற்றுநர் சந்திரலேகா (DRP), வட்டார மேலாளர் சி. பத்திரகாளி, பயிற்சியாளர்கள் திருச்சிராபள்ளி வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் உயர்திரு. குமார், உயர்திரு. ஜெயபாஸ்கரன் மற்றும் ADH திரு. செல்வபிரபு, AAO திரு. V. அருணாச்சலம், மாரமங்கலம் VAO சுப்பிரமணியன், மாரமங்கலம் அரசு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் திரு. செல்வராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர்(LH) M. பேச்சிக்கனி, வாழை தொகுப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், PLF பணியாளர்கள் ஆகிய அனைவரும் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
பயிற்சியில் வாழை விவசாயத்திற்கான மண் பரிசோதனை, மண்ணுக்கேற்ற வாழை விவசாயம், சொட்டுநீர் பாசனம், நோய் தடுப்புமுறைகள், இயற்கை உரவகைகள், மதிப்புகூட்டல், ஏற்றுமதி ஆகிய தலைப்புகளில் “வாழ வைக்கும் வாழை விவசாயம்” பொன் மொழிகளில் காணொலி மூலமாக தெளிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் இந்த பயிற்சியில் பங்குபெற்று பயனடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியை PLF கணக்காளர் மு.ஆனந்தவள்ளி, CST அ.பானுப்பிரியா ஏற்பாடு செய்திருந்தனர்.