
தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று தனி முத்திரை பதித்து வைத்துள்ள நாயகன் வடிவேலு தான். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் ரசிகர்களாக்கி வைத்திருக்கும் ஒரே கலைஞன் வடிவேலு மட்டுமே.,
சில வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளதால் ரசிகர்கள் அவரை வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடினார். பல நட்சத்திரங்களும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், வடிவேலுவின் இந்த பிறந்தநாளுக்கு அவருக்கு கிடைத்த ஒரு பரிசு அவரை நெகிழ வைத்தது. அவரது தாயின் ஓவியத்தை பரிசாகப் பெற்றிருக்கிறார். வடிவேலு.
தாயின் ஓவியத்தைக் கண்ட வடிவேலு நெகிழ்ந்து, சிறு துளி கண்ணீர் வடித்தார்.
Facebook Comments