Spotlightசினிமா

மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’… லார்க் ஸ்டூடியோஸின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு!

கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று மதுரையில் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கிடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தை இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இப்படம், அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பத் திரைப்படமாக உருவாகிறது.

தயாரிப்பாளர் K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது.

இன்று தொடங்கிய படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வலுவான கதை, திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button