
முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார்.
வயது மூப்பினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நீரிழிவு நோயினால் அவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து இன்று காலை வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் 5.05மணியளவில் வாஜ்பாய் உயிர் பிரிந்தது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.
Facebook Comments