
V R COMBINES விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் “வஞ்சி”. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ் சி ஆர். ஒளிப்பதிவு பின்சீர். இசையமைப்பாளர் சஜித் சங்கர். படத்தொகுப்பு ஜெயகிருஷ்ணன். ஹீரோவாக ராஜேஷும் ஹீரோயினாக நயீரா நிகார்.
முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் ராஜ நாயகம். குங்ஃபூ இந்திய தலைமை பயிற்சியாளராக உள்ளார். நட்டி நடராஜன் நடித்த சமீபத்தில் வெளியான சீசா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும், முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வருகிறார்.
இந்த கதையை பற்றி டைரக்டர் சொல்ல வருவது,” தமிழ்நாடு கேரளா மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரம், வேலை பார்க்கும் மக்களின் உண்மை சம்பவமாக தினந்தோறும் வன விலங்குகளால் கூலி தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் மோசமான உயிர் பலிகள் அதற்கு அரசு செய்கின்ற பாதுகாப்பு என்ன என்பதை பற்றிய வாழ்வியல் படம் தான் ”வஞ்சி”.
இதில் வாழுகிற ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிய தான் கதை இப்படத்தின் கதை. கோழையாக வாழ்வது பெண்ணல்ல வீரமாக வாழ்ந்து காட்டுவதே பெண்களின் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று உண்மையாகவும் மன தைரியத்தோடு மலைக் காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு ஒரு பெண்ணாக வாழ்ந்து நடித்து மிரட்டிருக்கிறார் ஹீரோயின் நயீரா நிகார். எல்லோருக்கும் ஒரு பாடமாக இந்த படம் அமைய வேண்டும் என்று படத்தின் பாடல்கள் மண் வாசனை கொண்டு மக்களின் மனதில் இடம் பிடிக்கிற வண்ணமாக இந்த பாடல்கள் இருக்கும்.” என்று டைரக்டர் கூறுகிறார்.
இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் விரைவில் படத்தினை திரைக்குக் கொண்டுவருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.